வௌிநாட்டு சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்!

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றை தற்காலிகமாக மூடுவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதிகாரிகள் அந்த தீர்மானம் தொடர்பில் தனக்கு அறிவித்ததாக சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க  கூறினார். 

கடந்த 08ம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டு நாளை 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சுற்றுலாப் பொலிஸ் துறையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறினார்.
Powered by Blogger.