சீதுவையில் தனியார் வங்கியில் கொள்ளை!

சீதுவை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று காலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

இன்று காலை 09.05 மணியளவில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கொள்ளையடித்த நபர் தப்பிச் சென்றுள்ளார். 

தலைக்கவசம் அணிந்து துப்பாக்கி ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையிட்டுள்ளதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்று இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநரை கைது செய்வதற்காக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Powered by Blogger.