பாச்சேரி கிராமத்தில் பாழடைந்து கிடக்கும் நிழற்குடை!

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பாச்சேரி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது நாளடைவில் பாழடைந்து விட்டதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்துவதில்லை. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிழற்குடை அமைக்கப்பட்டு சுமார் 3 ஆண்டுக்கு மேலாகிறது. ஆனால் அது நாளடைவில் பழுதாகி பாழடைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்தில் உள்ள நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Powered by Blogger.