கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் மே முதலாம் திகதியே!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்,   மே தின நிகழ்வுகள் மே முதலாம் திகதியே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த மே தின நிகழ்வுகள் கிளிநொச்சி - முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, தொழிலுரிமை என்பவற்றை வலியுறுத்தியே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அதேநேரம், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், நுவரெலியா மற்றும் தலவாக்கலை நகரங்களில் எதிர்வரும் மே 7ம் திகதியே தங்களது மே தினக் கூட்டங்களை நடத்துவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.