இன்றுமுதல் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை!

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை   இன்று  முதல் நடைமுறைக்கு வருகிறது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.
அதன்படி இந்த வரிச் சலுகை  இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
Powered by Blogger.