புதிய அமைச்சரவைக்கான பணிகள் நிறைவு!

புதிய அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அமைச்சுக்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ எனினும், இந்த அறிக்கையின் விபரங்களை தற்பொழுது வெளியிட முடியாது என மறுத்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் தொடர்பான ஒழுங்குகள் கடந்த புதன்கிழமை நிறை வு செய்யப்பட்டு .
இதையடுத்து கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றிருக்கும் ஜனாதிபதிக்கு அந்த அறிக்கை, உடனடியாகவே தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டது.
அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலர் சமன் எக்கநாயயக்கவிடமும் அந்த அறிக்கையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் படி தேசிய அரசாங்கத்தில் 48 அமைச்சர்களை நியமிக்க முடியும்.
சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிரதமரின் செயலருடன் இணைந்து, புதிய அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.