இலங்கையின் பங்களிப்பும் பொதுநலவாய வர்த்தக நிதி முயற்சியும்!

சிறிய நாடுகளுக்கான வர்த்தக நிதி வசதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கப் போவதாக இலங்கை உறுதியளித்துள்ளது.
சிறிய அளவிலான நாடுகள் சர்வதேச சந்தைகளை அணுகக்கூடிய வசதி வாய்ப்புக்களை பெற வழிவகுப்பது இதன் நோக்கமாகும். இது தொடர்பான உடன்படிக்கையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையின் சார்பில் கைச்சாத்திட்டார். லண்டனில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டுடன் இணைந்ததாக, இதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


2013ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிய நாடுகளுக்கான வர்த்தக நிதி வசதியை ஏற்படுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம் 50 இலட்சம் டொலர்கள் வரையிலான நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிய அளவிலான நாடுகள் 30 கோடி டொலர் வரையிலான வர்த்தக வசதிகளை பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.
Powered by Blogger.