சுகாதார சேவை என்பதன் அர்த்தத்தை அறிய இலங்கையை நோக்குங்கள்!

இலங்கையின் சுகாதாரத்துறையை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.
இதுதொமபாக அவர் ஆமலும் தெரிவிக்கையில் தரமுயர்ந்த ஆரம்ப சுகாதார சேவைகளின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால்இ பொதுநலவாய நாடுகள் இலங்கையை நோக்க வேண்டும்திரு பில் கேட்ஸ் தெரிவித்தார்.


லண்டனில் நடைபெறும் பொதுநலவாய இராஜ்ய தலைவர்களது மாநாட்டின் கூட்டு பூர்வாங்க அமர்வில் பில் கேட்ஸ் உரையாற்றினார். 
இந்த மாநாடு பொதுவான எதிர்காலத்தை நோக்கி என்ற தொனிப் பொருளில் இடம்பெற்றது.

சமகாலத்தில் பெருமளவு சுகாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்க்கும் வழிவகைகளில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அத்தகைய புரட்சியை ஏற்படுத்த பொதுநலவாய அங்கத்துவ நாடுகளில் அனுசரிக்கும் சிறந்த நடைமுறைகளை ஒட்டுமொத்த உலகமும் வரித்துக்கொள்வது அவசியம் . இந்த விடயத்தில் இலங்கையும்இ பங்களாதேஷூம் முன்னணியில் திகழ்கின்றன. அந்நாடுகளில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் கூடுதலாக பெண் சுகாதார பராமரிப்பு ஊழியர்களால் முன்னெடுக்கப்படுவது சிறப்பம்சம் என மைக்ரோசொப்ட்டின் ஸ்தாபகத் தலைவர் பில் கேட்ஸ் குறிப்பிட்டார்.
Powered by Blogger.