இராணுவச் சிப்பாயும் காவற்துறை உத்தியோகஸ்தரும் விபத்தில் பலி!

சிலாபம் - கொஸ்வத்த - மீகஹவெல சந்தியில் இரு உந்துருளிகள் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 இராணுவ சிப்பாய் ஒருவரும் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் .விபத்தில் இருவரும் படு காயமடைந்து மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 உயிரிழந்த காவற்துறை உத்தியோகஸ்தர் மீகஹவெல பிரதேசத்தினை சேர்நத 51 வயதுடையவர் என்பதுடன், இராணுவ சிப்பாய் சிலாபம் - கொஸ்வத்த பிரதேசத்தினை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Powered by Blogger.