கவுடுல்ல தேசிய பூங்காவில் பரவியுள்ள நோய்!

கவுடுல்ல தேசிய பூங்காவில் தொடைகள் மற்றும் வாய்வழி நோய்கள் பரவ கூடும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 குறித்த நோயினால் நோயுற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிற யானை குட்டி ஒன்று பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிரித்தலை மருத்துவ அதிகாரி கே.எஸ்.எஸ் கலிகுஆரச்சி எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

 பூங்காவில் நுழையும் மாடுகளினால் குறித்த நோய் பரவி வருவதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நோய் பரவலை தடுப்பதற்கு தற்போது வரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.