பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் யாழ் நல்லூரானை தரிசனம்!


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பல படங்களில் நடித்திருந்த கணேஷ் வெங்கட்ராமன். இவருடைய மனைவி நிஷா தமிழில் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் கூட நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் இருந்து சில காரணங்களால் தான் வெளியேறிவிட்டதாக கூறி ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தார்.
இந்நிலையில் இலங்கைக்கு சென்றுள்ள கணேஷ் மற்றும் அவருடைய மனைவி நிஷா இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் முருகன் கோவிலுக்கு முன் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். அவர்களுடைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.
Powered by Blogger.