ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதா?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான யோசனையை கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அமைச்சர்கள் குழுவினர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் கொழும்பில் உள்ள இல்லத்தில் நேற்றிரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 சர்வமதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இந்தச் சந்திப்பு தொடர்பில்  கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன, கொள்கையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த அரசாங்கத்தில் முன்னோக்கிச் செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, தமது அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

 ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர், அவரிடம் அறிக்கையை கையளித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.