8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்று (18) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் குறிப்பிட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரனைகளை மேற்கொண்ட போதே குறித்த சடலம் மன்னார் தோட்ட வெளியை சேர்ந்த 71 வயது நிரம்பிய காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) என்பவருடையது என தெரிய வந்துள்ளது. 

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட 8 பிள்ளைகளின் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த 26 ஆம் திகதி மதியம் வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை. 

அவரை தேடியும் எங்கும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் அவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் கடந்த மாதம் 31 ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்திருந்த நிலையில் நேற்று (18) மாலை உவரி கட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் குறிப்பிட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.