வடக்கு தெற்கு உறவுப்பாலமாக்கும் மென்பந்து போட்டி!


வடக்கு - தெற்கு உறவுப்பாலம் மென்பந்து போட்டி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கும் மாத்தறை ராஹுல கல்லூரிக்கும் இடையே இன்று நடைபெறுகிறது. கருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இந்த ஆட்டம் தலா 40 ஓவர்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாகும். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவன் மணிமாறன் மற்றும் ராஹுல கல்லூரி பழைய மாணவர் விஜேசுந்தர ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டது என ஹாட்லி கல்லூரி அதிபர் முகுந்தன் தெரிவித்தார். வடக்கு - தெற்கு மாணவர்களுக்கு இடையே நட்புறவை வளர்க்க இந்தப் போட்டி இரண்டாவது வருடமாக நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மாத்தறையில் ராஹுல கல்லூரியில் முதலாவது போட்டி இடம்பெற்றது. அதில் ராஹுல கல்லூரி வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது போட்டி ஹாட்லி கல்லூரி மைதானத்தில் இன்று இடம்பெறுகிறது. "இனங்களுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் வடக்கு, தெற்குக்கான உறவுப் பாலமாகவும் இந்தக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இனவேறுபாடுகளிலின்றி நாம் ஒன்றுபட்ட இலங்கையர் என்ற வகையில் செயற்பட இது வழிசமைக்கும்" என்று ஹாட்லி கல்லூரி அதிபர் முகுந்தன் தெரிவித்தார். "இந்தப் போட்டியின் ஊடாக வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான உறவையும், எதிர்கால சந்ததிக்கு அமைதி மிக்க சமூகமொன்றை உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளோம்" என்று ராஹுல கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் மனோச் மதுசங்க தெரிவித்தார்.
Powered by Blogger.