யாழ் மிருசுவில் பகுதியில் ரயில் மோதி யுவதி படுகாயம்!

யாழ். மிருசுவில் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08) முற்பகல் ரயில் மோதி 18 வயது யுவதியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனம் மோதியுள்ளது. இதன் போது அந்த வாகனத்தில் பயணித்த யுவதியே இவ்வாறு படுகாயமடைந்தவராவார்.
விபத்தில் படுகாயமடைந்த யுவதி யாழ்.சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும்,வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதிக்கு எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.