முள்ளியவளையில் தூக்கத்தில் இருந்த"யானை"பாகன்!

கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட யானை ஒன்றை பார்வையிட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முள்ளியவளை சிறுகாட்டு பகுதிக்கு இன்று சென்றுள்ளனர்.

கோயில் திருவிழா ஒன்றிற்காக முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்பட்ட குறித்த யானையை முள்ளியவளை சிறுகாட்டு பகுதியில் நிறுத்திய யானைப்பாகன் ஒரு மரத்தின் கீழ் உறங்கிவிட்டார்.

சில மணிநேரத்தின் பின்னர் அவர் விழித்துப்பார்த்த போது அவ்விடத்தில் சிறுவர்கள் உட்பட நூற்றுக்காணக்காண பொதுமக்கள் ஒன்று கூடியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் குறித்த யானையை இராணுவத்தினரும் சென்று பார்வையிட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். 
Powered by Blogger.