உள­வ­ளத்­துணை டிப்­ளோ­மா­ பட்டதா­ரி­களும் உள்­வாங்­கப்­பட வேண்­டும்!

உள­வள ஆசி­ரி­யர்­க­ளுக்­கான ஆட்­சோ்ப்பில் பட்­ட­தா­ரிகள் மாத்­தி­ர­மன்றி  உள­வ­ளத்­துணை டிப்­ளோ­மா­ பட்டதா­ரி­களும்  உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென இலங்கை ஜன­நா­யக ஆசி­ரியர் சங்கம் கல்வி அமைச்­சிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கை ஜன­நா­யக ஆசி­ரியர் சங்கம் கல்வி அமைச்­சுக்கு கடிதம் அனுப்பி வைத்­துள்­ள­தாக சங்­கத்தின் தலைவர் ஏ.பி கமர்டீன் தெரி­வித்தார்.
மேற்­படி விடயம் தொடாபில் சங்கத் தலைவர் தெரி­வித்­த­தா­வது, 
உள­வள ஆலோ­ச­னை­யாளர், உள­வள ஆலோ­சனை உத­வி­யாளர் என்ற உள­வ­ளத்­துறை சார்ந்த பதவி நிய­ம­னங்­க­ளுக்­காக ஆடசேர்ப்பு செய்­யப்­ப­டும்­போது உள­வ­ளத்­து­ணையில் டிப்­ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்­துள்ள உள­வ­ளத்­துணை டிப்­ளோ­மா­தா­ரி­க­ளையும் உள்­வாங்­கு­வ­தற்­கான நியா­யங்­களை முன்­வைத்து பல முறை எமது சங்கம் கோரிக்கை விடுத்­துள்­ளது. இருப்­பினும், இக்­கோ­ரிக்­கைகள் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை.
இலங்­கையின் சனத்­தொ­கையில் 2.3 வீத­மானோர் உளப் பிரச்­சி­னை­யுடன் காணப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சின் ஆய்வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இன்று நாட்டில் நிக­ழு­கின்ற வன்­செ­யல்கள் துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கைகள் மற்றும் தற்­கொ­லைகள் போன்ற சமூக பிரச்­சி­னை­களில் உளப் பாதிப்­புக்­களும் குறித்த வகி­பங்­கினை வகிக்­கி­றது.
மாண­வர்­களின் ஒழுக்­க­மற்ற நடத்­தை­க­ளிலும் உளப் பிரச்­சி­னைகள் கணி­ச­மான பங்­கினை  செலுத்­து­கின்றன. இவ்­வா­றான நிலையில் குறித்த நபர்­க­ளுக்கு தொழில்­வாண்மை உள­வ­ளத்­து­ணை­யா­ளர்­களின் உதவி இன்­றி­ய­மை­யா­த­தா­க­வுள்­ளது. இவ்­வாறு பல்­வேறு மட்­டங்­களில்  பல்­வேறு தரப்­பி­னருக்கு உள­வள ஆலோ­சனை வழங்க வேண்­டிய தேவை தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்­ளது.
இந்­நி­லை­யில்  இவற்றைக் கருத்­திற்­கொண்டு சமூக சேவைகள் அமைச்சு. சிறுவர் அபி­வி­ருத்தி மற்றும் மகளிர் விவ­கார அமைச்சு, சுகா­தார அமைச்சு என்­ப­வற்­றினால் பல்­வேறு அரச நிறு­வ­னங்­களில் உள­வள ஆலோ­சகர்­களும் உள­வள உத­வி­யா­ளர்­களும் என பல்­வேறு நிய­ம­னங்கள் உள­வ­ளத்­து­றையில் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.
இந்த நிய­ம­னங்­க­ளின்­போது பட்­ட­தா­ரி­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கி­றது. ஆனால், 18 மாதங்கள் வரை­யான கால எல்லையைக் கொண்ட முழுக்க முழுக்க உள­வி­ய­லுடன் தொடர்­பு­பட்ட கற்கை நெறியை   கால நேரங்கள் மற்றும் பணச் செலவு செய்து  சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய சமூக அபி­வி­ருத்தி நிறு­வகம் போன்ற உள­வ­ளத்­துணை கற்கை நெறிக்­காக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிலை­யங்­களில் கல்வி கற்று உள­வியல் உள­வ­ளத்­து­ணையில்  டிப்­ளோமாப் பட்­டங்­களை  பலர் பூர்த்தி செய்­துள்­ளர்கள்.
இக்­கற்கை நெறியை  பூர்த்தி செய்­வ­தற்­காக ஒரு இலட்­சத்­துக்கும் மேலான பணம் இவர்­களால் செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு செலவு செய்து இக்­கற்கை நெறியை  பூர்த்தி செய்­துள்­ள­வர்கள் நூற்­றுக்­க­ணக்கில் இருந்தும், இவர்கள் குறித்த நிய­ம­னங்­க­ளின்­போது உள்­வாங்­கப்­ப­டாது புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றனர்.
குறைந்த பட்சம் இத்­து­றையில் ஆட்சேர்ப்பு செய்­வ­தற்­கான விண்­ணப்­பங்­களில் கூட டிப்­ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்­த­வர்­களும் விண்­ணப்­பிக்க முடியும் என்ற வாசகம் கூட இடம்­பெ­று­வ­தில்லை. 
இதனால் இக்­கற்கை நெறியைப் பூர்த்தி செய்­ப­வர்கள் அவர்­க­ளது துறையில், தொழில்­வாய்ப்­பொன்றை பெற்­றுக்­கொள்­வதில் எதிர்­கா­ல­மின்றி உள்­ளனர் என்று தெரிவித்தார். . 
இந்­நி­லையில், பாட­சா­லை­களில் உள­வள ஆசி­ரி­யர்­களை நிய­மிப்­ப­தற்­கான ஆட்­சோ்ப்பு நட­வ­டிக்­கை­களை கல்வி அமைச்சு முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக அறிய முடி­கி­றது. அதனால், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கல்வி நிறுவனங்களில் உளவளத்துணையில் டிப்ளோமா கற்கை நெறியை ப் புர்த்தி செய்து தொழில்வாய்ப்பின்றியுள்ள டிப்ளோமாதாரிகளின் நிலமைகளைக் கருத்திற்கொண்டு, உளவள ஆலோசகர் மற்றும் உளவள உதவியாளர் நியமனங்களுக்காக பட்டதாரிகளை மாத்திரமின்றி டிப்ளோமாதாரிகளையும் இணைத்துக்கொள்ளுமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக  இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.