சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான போட்டிப் பரீட்சையில் மாற்றம்!

சாரதி அனுமதி பத்திரங்களை பெறுவதற்கான போட்டிப் பரீட்சையை டிஜிட்டல் முறையில் நடத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய முறை  மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பரீட்சை மோசடிகளை தடுத்து நிறுத்தி, பெறுபேறுகளை துரிதமாக வெளியிடும் நோக்கத்துடன்  இதனை  அறிமுகம் செய்துள்ளோம்.
இந்த முறையின் கீழ் ஒரு நிலையத்தில் 50 பரீட்சார்த்திகள் ஒரே தடவையில் தோற்றலாம். முதற்கட்டமாக மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தின் வேரஹர நிலையத்தில் டிஜிட்டல் முறையில் பரீட்சை இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Powered by Blogger.