பிரதேச சபைத் தவிசாளர் உட்பட மூவர் கைது!

தமன்கடுவ பிரதேச சபைத் தவிசாளர் பிரேமசிறி முனசிங்க உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கதுருவெல, சொமியல் சந்தியில் மஞ்சள் கடவையில் கெப் வாகனத்தை நிறுத்திய போது அதனை முன்னாள் எடுக்குமாறு குறித்த கெப் வாகள சாரதிக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் வாகனத்திற்குள் இருந்த பிரதேச சபை தவிசாளர் " நான் யார் என்று உனக்கு தெரியுமா " எனக் கூறி பொலிஸாரிற்கு தகாத வார்த்தைகளை பிரயோகித்து பொலிஸாரின் துப்பாக்கிகளையும் கைப்பற்றி அவர்களை தாக்கியுள்ளனர். 

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு தாக்குதலுக்குள்ளான பொலிஸார் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.