களுகங்கை அபிவிருத்தித் திட்டத்திற்கு சவுதி அரேபியா நிதியுதவி!

களுகங்கை அபிவிருத்தித் திட்டத்திற்கு மேலும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது.  மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் களுகங்கை அபிவிருத்தித் திட்டத்திற்கு சவுதி அரேபியா, குவைட் மற்றும் ஒபெக் அமைப்புக்களான கடன் உதவிகள் வழங்கப்படுகின்றது.

 இந்த திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 140 தசம் 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக 89 தசம் 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபிவிருத்தித் திட்ட உதவியாளர்களால் வழங்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மேலும் 50 தசம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.