முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சி!

அரசாங்கம் தம்மை பற்றி சிந்திக்காது செயற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 உள்ளுராட்சி மன்றங்கள் அமைக்கின்றபோது தமக்கு அரசாங்க தரப்பில் இருந்து அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன.   எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சிக்கு ஆதரவை வழங்கியுள்ளதுடன், தமக்கான கௌரவத்தையும் அளித்துள்ளது. காங்கிரஸை அழிப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சித்துவருவதாக தொண்டர்கள் குற்றம் சுமத்துவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரவுப் ஹக்கீம்,

 இதன் காரணமாக எதிர்காலத்தில் தொலைநோக்கின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.