கட்டுநாயக்க விமான நிலைய பணியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

கட்டுநாயக்க விமான நிலைய பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. 

10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க அரசாங்க தரப்பால் இணக்கம் தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

1994ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதுடன், அதன்படி இந்த ஆண்டு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறி விமான நிலைய பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Powered by Blogger.