ஜேர்மனியில் குழந்தையை கடித்துக் குதறிக் கொன்ற வளர்ப்பு நாய்!

ஜேர்மனியில் ஏழு மாத குழந்தையை வளர்ப்பு நாயே கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Bad König என்ற நகரில் பெற்றோர் தங்களது ஏழு மாத குழந்தையுடன் வசித்து வருகின்றனர்.
கடந்த திங்களன்று பாசத்துடன் வளர்க்கப்பட்ட நாய், குழந்தையை கடித்துள்ளது, இதை பார்த்த குழந்தையின் தந்தை உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் மாலையே குழந்தை இறந்துள்ளது.
கலப்பினத்தை சேர்ந்த குறித்த நாய் சண்டையிடுவதில் சிறப்புத் திறன் வாய்ந்தது எனத் தெரியவருகிறது.
இச்சம்பவத்தையடுத்து நாயை வேறொரு தங்குமிடத்துக்கு கொண்டு சென்ற பின்னரும் ஆக்ரோஷமான நிலையில் இருந்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்களன்று நடந்த இந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து பெற்றோர்கள் மீளவில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.