வலி. வடக்கு மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமா?!


வலி. வடக்கில் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து 500 ஏக்கர் காணிகள் எதிர்வரும் வாரம் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி இக்காணிகள் விடுவிக்கப்படும் எனவும் அன்றைய தினத்திலிருந்து, பொன்னாலை- பருத்தித்துறை வீதி வழியூடாக பொதுமக்கள் சுதந்திர போக்குவரத்தில் ஈடுபட அனுமதிக்கப்படும் எனவும் மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே பொதுமக்களின் பயணத்துக்காக குறித்த வீதி திறந்து விடப்பட்டுள்ளபோதிலும், அரச பேருந்துகள் இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரமே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் எதிர்வரும் வாரம் முதல் குறித்த வீதியை காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.