பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 12 ஆண்டுகள் சிறை!


பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அந்நாட்டு காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. ஒரு பொறியியல் நிறுவனத்திடம் 1.1 மில்லியன் டொலர் மதிப்புள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பைகையூட்டலாகபெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்து செய்ய நடந்த இரு கடைசி நேர முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 72 வயதுடைய லூயிஸ் கடந்த 2003 முதல் 2011 வரை ஜனாதிபதி பதவியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.