எரிபொருள் விலையை தீர்மானிக்கும் விலை சூத்திரம் அனுப்பி வைப்பு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள் விலையை தீர்மானிக்கும் விலை சூத்திரத்தை அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பியுள்ளது.  திரைச்சேரியினால் தயாரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து தெளிவாக காட்டப்பட்டுள்ளதாக, நிதியமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றதும், இந்த எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை இந்த மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த நிதி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருட்களின் விலையை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க முன்னர் தெரிவித்திருந்தார்.
 இந்த விலை அதிகரிப்பு தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Powered by Blogger.