நாட்டில் எந்த மின்சக்தி நெருக்கடியும் இல்லை!


எதிர்காலத்தில் நாட்டில் பாரிய மின்சக்தி நெருக்கடி ஏற்படக்கூடும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.    கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

 மின்சக்தி தேவையின் பொருட்டு நிலவும் கேள்வி அதிகரித்துச் செல்லும் நிலையில் மின் உற்பத்தியும் அதிகரித்துச் செல்வதே இந்த நிலைமைக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 எவ்வாறாயினும், நாட்டில் எந்த மின்சக்தி நெருக்கடியும் இல்லை என மின்சக்திவளத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார் கல்கமுவ பிரசேதத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

Powered by Blogger.