எதிரியாக பார்க்கபட்ட சிம்புவுடன் விஷால்!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் போது இரு துருவங்கலாக மோதிக்கொண்டவர்கள் நடிகர் சிம்பு மற்றும்
விஷால். இந்த பிரச்சனைக்கு பின் விஷால் மற்றும் அவருடைய தரப்பினர் யாரும் சிம்புவுடம் பேசுவதைக் கூட நிறுத்திக்கொண்டனர். 
சமீபத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்,பெப்சி உள்ளிட்ட அனைத்து திரைப்பட அமைப்புகளும் இணைந்து நடத்திய
போராட்டத்திற்கே சிம்புவை அழைக்க வில்லை என அவரே கூறி இருந்தார். 
இந்நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில், முன்னணி நடிகர்களுடன் நடிகர் சங்கம்
முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 
இந்த சந்திப்பில் நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், கார்த்தி, சிம்பு, அரவிந்த்சாமி, நடிகை சுஹாசினி
மணிரத்னம், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் படத்தயாரிப்பில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை எப்படி குறைப்பது குறித்து நடிகர்களுடன்
ஆலோசனை மேற்கொள்ளப்பட்டட்ஜாக தெரிகிறது. 
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிம்புவை எதிரியாக பார்த்ததாக கூறப்பட்ட விஷால், அவர் தோல்மீது கைபோட்டு, கார்த்தியுடன்
ஆலோசனை செய்வது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நடிகர் சிம்பு மற்றும் விஷால் இருவரும் தங்களுக்குள்
இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து திரையுலகினர் நன்மைக்க கை கோர்த்துள்ளனர் என்பது தெரிகிறது.
Powered by Blogger.