ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய இலக்கங்கள்!

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

அதன்படி இந்த புதிய உறுப்பினர் இலக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. 

தொழிலாளர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களின் தகவல்கள் அடங்கிய விபரங்களுடன் திணைக்களத்தின் கணினியில் தரவேற்றும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

வெவ்வேறு பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள ஊழியர்களுக்கு பல இலக்கங்கள் காணப்படுவதால், நிதியத்தின் பயன்களை பெற்றுக் கொள்ளும் போது எதிர்நோக்கும் நெருக்கடியை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினர் இலக்கமாக பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Powered by Blogger.