யாழில் முன்னணியினர் கல்லுண்டாய் வெளியிலுள்ள கழிவுகள் தரம்பிரிக்கும் இடம் பார்வை!


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் (17.04.2018) அன்று யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியிலுள்ள திண்மக் கழிவுகள் தரம்பிரிக்கும் இடம் மற்றும் காக்கைதீவிலுள்ள திண்மக் கழிவுகள் மீள்சுழற்சி நடைபெறும் இடங்களைப் பார்வையிட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர உறுப்பினருமான வி.மணிவண்ணன் தலைமையிலான இக் குழுவினர் அங்கு நிலமைகளைப் பார்வையிட்டதோடு அங்கு பணியாற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடி அங்குள்ள குறைநிறைகள் பற்றிக் கேட்டறிந்தனர். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் உள்ளிட்ட யாழ் மாநகர அதிகாரிகள் சிலரும் பங்குபற்றியிருந்தனர்.
Powered by Blogger.