நுவரெலியா வசந்தகால நிகழ்வுகள் ஆரம்பம்!

நுவரெலியா வசந்தகால நிகழ்வுகள் இன்று காலை, பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின.
நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்நிகழ்வில்,

நுவரெலியா, வெலிமடை, ஹக்கல, நானுஒயா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியங்கள் இடம்பெற்றன.

நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் நாட்களில், மோட்டார் கார் ஒட்டப் போட்டி, மலர் கண்காட்சி, குதிரை ஓட்டப்போட்டி, இசை நிகழ்வுகள், சர்வதேச டெனிஸ், கொல்ப் போட்டிகள், பொலிஸாரின் சாகச நிகழ்வுகள் உட்பட பல்வேறு  நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வசந்த கால நிகழ்வை முன்னிட்டு நுவரெலியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Powered by Blogger.