உள்நாட்டு வருவாய் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மிகவும் அசாதாரண முறையில் மக்களிடமிருந்து வரியை அறவிடும் புதிய உள்நாட்டு வருவாய் சட்டத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு தொழிற்சங்கங்கள் பல இணக்கம் தெரிவித்துள்ளன” என்றார்.  
“இந்தப் புதிய சட்டத்தை மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவானது. இந்நிலையில், மக்களுக்கு நிவாரணங்களை வழங்காத அரசாங்கம், மக்கள் மீது மேன்மேலும் வரிச்சுமையை சுமத்திக்கொண்டே இருக்கின்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
“நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளன. இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாக அரசாங்கம் மக்களை மாற்றிவிட்டது. இந்நிலையில், புதிய உள்நாட்டு வருவாய் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  
“இதேவேளை, இம்முறை மேதினப் பேரணியில், புதிய உள்நாட்டு வருவாய் சட்டத்துக்கு எதிரான குரல் வலுப்பெற்றிருக்கும் என்பதுடன், மே தினத்தின் பிரதான தொனிப்பொருளாக புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் அமைந்திருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.    

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.