முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் சிறப்பு அமர்வு கடந்த வாரம் வடமாகாண சபையில் நடைபெற்றது.
அதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்கு வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்தனர்.
அதன் பிரகாரம் வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை ஒன்று கூடினர். சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொக்கிளாய் , நாயாறு, மாயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர்கள் நேரடியாக சென்று அந்த பகுதிகளை பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக மாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர். 
போராட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மனுக் முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டது.Powered by Blogger.