சுதந்திர தமழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி.!

சுதந்திர தமழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி.அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் ! அன்னை பூபதி கண்களை மூட, தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. அன்னை பூபதி அவர்களின் 30 வது ஆண்டு நினைவேந்தல் முன்னிட்டு பேர்லின் மாநகரில் சுடர்வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றியதோடு மாவீரர்களையும் நாட்டுப்பற்றார்களையும் மனதில் நிறுத்தி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது .
இறுதியாக எம் தேசத்தின் விடுதலையை நோக்கி அயராது செயற்படுவோம் என உறுதியெடுத்து சுடர்வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது.

Powered by Blogger.