எட்டு மாதக் குழந்தையுடன் தொடரூந்து முன் பாய்ந்த தந்தை!

குருநாகல் - பல்லேகொடுவ பிரதேசத்தில் நபரொருவர், தனது 8 மாத குழந்தையுடன் தொடரூந்து முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தொடரூந்து முன்னால் நேற்று மாலை தனது குழந்தையுடன் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபல்லேகொட்டுவ  வெல்ல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தனது குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

 சடலங்கள் குருநாகல் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Powered by Blogger.