கேப்பாப்பிலவு மக்கள் உரிமைகளுக்கு போராட்டமே தீர்வு!

போராட்டத்தின் மூலம் மாத்திரமே மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இரணைதீவு மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் இரணைதீவில் தங்கி தமது சாத்வீக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேற்று நேரில் சென்று சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவித்த அவர், ”தமது அடிப்படைத் தேவைகளுக்காக, மக்கள் தாமாகவே போராடி வெற்றியும் கண்டுள்ளனர். கேப்பாப்பிலவு, கிளிநொச்சியில் பரவிபாஞ்சான், வலி-வடக்கு போன்ற பகுதிகள் மக்களின் போராட்டங்களின் மூலமாகவே மீட்கப்பட்டுள்ளன.
எனவே, மக்களின் போராட்டங்கள் ஒருநாளும் தோற்றுப் போகாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.