நெஞ்சைப் பிளந்து பார்..!!!

பிரபாகரனியம்
இறந்துபோனதாய்
பிடரி குனிந்தவர்
குரைக்கிறார்!

எவன்டா சொன்னான்
எங்கள் மன்னன்
மறைந்தானென்று
வாடா வா வந்து பார்!!
எங்கள் நெஞ்சைப்
பிளந்து பார்!


நெறி பிறழாக் கொள்கையில்
நேரிய சிந்தனையில்
எங்கள் அண்ணன்
வாழ்கின்றார்.
தன்னினத்தின் மீது பாசம்
கொண்டவன்
உதிரத்தில்
அண்டமெல்லாம்
ஆள்கின்றார் எம்
ஆதவன்!


எதிரியை எதிர்த்து
துணிச்சலாய்
குரலெழுப்பும்
ஒவ்வொரு தன்மானத்
தமிழனின் ஆன்மாவில்
வருகின்றார்!
மண்ணிற்காய் தன்னை
உருக்கும்
உண்மை மனிதரின்
இதயமாய்
இயங்குகின்றார் எம்
இயவுள்!


சாதி மதபேதங்களை
கடந்த
சமத்துவமான சங்கமத்தில்
சிம்மாசனமேறி-எம்
சிந்தையை
ஆள்கின்றார் எம்
ஆழ்வார்!
சுயநலங்களை கடந்த
தூய்மையான
பொதுநலத்தில்
பொங்கிவரும்
வெள்நுரையாய்
புரையோடி
இருக்கின்றார் எம்
இரவி!


ஆணுக்கு பெண் நிகர்
எனும் வேதவாக்கில்
வேரூன்றி இருக்கும்
ஆண்மையின் அவதாரத்தில்
ஆணழகனாய்
ஒவ்வொரு
மனங்களிலும்
மகுடமாகின்றார் எம்
மயோரன்!


அறநெறி கொண்டு
உரமேறிய நெஞ்சோடு
உரிமைக்காய்
உரக்கக் குரலெழுப்பும்
மறவர் பிள்ளைகளின்
நிறம் மாற நெறிதனில்
அறக் காவலனாய்
அகத்தினில்
நிலைக்கின்றார் எம்
ஊருணி!

-குமார் தூயவன்.-
Powered by Blogger.