சற்று முன்னர் கொழும்பில் ஊடக நிறுவனத்தில் பட்டாசு தாக்குதல்!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனமான News first ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது சற்று முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் சக்தி/சிரச தலைமை காரியாலயத்தை
சுற்றி வளைத்து ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பெரும்தொகயில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.
இதனால்  பட்டாசு வெடி சத்தத்தில் ஒரு கண நேரம் சக்தி/சிரச தலைமையகம் கதிகலங்கி போனதோடு பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தெரியாத நபர்களினால் இந்த பட்டாசு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். அந்த பகுதியில்  சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Powered by Blogger.