சிரியாவில் நச்சுவாயுத் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை!

கிழக்கு கௌட்டாவின் டவுமா நகரில் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டுவரும் நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் பீற்றர் சலமா நேற்று  நச்சுவாயுத் தாக்குதலுக்குள்ளான சுமார் 500 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. (புதன்கிழமை) இதைக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அவர், டவுமா நகரில் நச்சுவாயுத் தாக்குதலுக்குள்ளான அறிகுறிகளுடன் சுமார் 500 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக, அவர்களது உடம்பில் அரிப்பு, எரிச்சல் தன்மை ஆகிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
மேலும், டவுமா நகரில் கடந்த வாரம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில், சுமார் 70 பேர் உயிரிழந்துடன், இவர்களில் 43 பேர் நச்சுவாயுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், அவர் கூறியுள்ளார்.
எனவே, டவுமா நகரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக சுகாதாரச் சேவைகளை வழங்கவும், சுகாதார மதிப்பீடுகளை மேற்கொள்ளவும், அப்பகுதிக்கு சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.