பிரித்தானிய பிரஜை இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயம்!

இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பிரித்தானிய பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதுருவ, கலபட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஜேர்மன் நாட்டவர் காயமடைந்ததாக இன்று காலை செய்தி வெளியானது.
எனினும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் அவர் பிரித்தானிய நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த 66 வயதான மொஹமட் ஸ்மையில் வுட்லியானா என்பவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் இலங்கையில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றை நடத்தி செல்கின்றார். இந்நிலையில் அவர் தனது நண்பருடன் நேற்று இரவு 9 மணியளவில் ஜீப் வண்டியில் இந்துருவ கலபட பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
ஜீப் வண்டியை நிறுத்தியவுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டதென இதுவரை தகவல் வெளியாகாத நிலையில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.