கண்டி சம்பவம் தொடர்பில் கைது! இன்று மீண்டும் விசாரணை!

கண்டி  தெல்தெனியவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 கடந்த மாதம் 19 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது கைது செய்யப்பட்டிருந்த 24 பேரில் 8 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏனைய அனைவரும் இன்று வரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை 1996 ஆம் ஆண்டு நாவற்குழியில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 இந்த மனு கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கின் முதலாம் எதிரியான மேஜர் ஜென்ரல் துமிந்த கெப்பட்டிபொலாவினை மன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
             
Powered by Blogger.