முல்லைத்தீவிற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர விஜயம்!


புதுகுடியிருப்பு பிரதேச செயலகம் சென்ற நிதி அமைச்சர் மங்கள சமரவீர பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை சந்தித்து சமுக பொருளாதார வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் சென்ற நிதி அமைச்சர் அங்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் உதவிகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார். யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகிய பொதுமக்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கான பல்வேறுபட்ட உதவித் திட்டங்களை தனது அமைச்சினூடாக இந்த ஆண்டு மே மாதம் தொடக்கம் செயற்படுத்தவுள்ளதாக அவர் உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த கலந்துரையாடல்களில் மத்திய வங்கி ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது, கடலில் நாங்கள் தொழில் செய்யக்கூடியதான சூழல் காணப்படவில்லை தரையில் விவசாயம் செய்ய நிலங்கள் இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களாகிய நாங்கள் எப்படி சமூக பொருளாதார வாழ்க்கையை கட்டியெழுப்புவது என நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இறுதி யுத்தின் போது உடுத்த உடுப்புடன் நிர்காதியன நிலையிலே நாங்கள் இராணுக்கட்டுப்பாடு பிரதேசத்திற்கு சென்றிருந்தோம். எமது காணிகளுக்குறிய ஆவணங்களை தற்பொழுது சமர்பிக்கும்படி வனவள அமைச்சு கோருகின்றது. அவை எங்களிடம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்களின் காணிகளை கைப்பற்றியுள்ளனர். கடலில் நாங்கள் தொழில் செய்யக்கூடியதான சூழல் காணப்படவில்லை அதற்கு காரணம் சட்டவிரோத மீன்பிடித்தொழில்கள் அதிகரித்துள்ளது. தரையில் விவசாயம் செய்ய நிலங்கள் இல்லை அவற்றை இராணுவத்தினரும் வனவள துறை அமைச்சும் தம்வசம் வைத்துள்ளனர். இந்தநிலை தொடரும் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களாகிய நாங்கள் எப்படி சமூக பொருளாதார வாழ்க்கையை கட்டியெழுப்புவது அமைச்சரிடம் மக்கள் விகவியுள்ளனர். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர், பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி வருகின்றோம். பொதுமக்களின் காணிகள் விடுவிப்பது தொடர்பில் இராணுவத்தரப்பினருடன் பேச்சுவர்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். சட்டவிரோத மீன்பிடிதொழில் தொடபில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.