விஜய் குறித்து தவறாக கூறிய பெண்ணின் முதுகில் அடித்த டிராபிக் ராமசாமி!

ஜெயலலிதா உள்பட அனைத்து அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிய சமூக சேவையாளர் டிராபிக் ராமசாமி என்பது தெரிந்ததே. இவரது வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஒன்றில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோஹினி, விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், சீமான், குஷ்பு, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் விக்கி இயக்கி வருகிறார்இந்த நிலையில் டிராபிக் ராமசாமியும் அவரது உதவியாளர் பாத்திமாவும் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில் ‘டிராபிக் ராமசாமி படத்தின் கிளைமாக்ஸில் டிராபிக் ராமசாமி தனது அரசியல் வாரீசாக விஜய்யை கைகாட்டுகிறார் என்றும், விஜய்யின் அரசியலுக்கு எஸ்.ஏ.சி, டிராபிக் ராமசாமியின் புகழை பயன்படுத்துவதாகவும் பாத்திமா குற்றஞ்சாட்டியுள்ளார்.ஆனால் இதே பேட்டியின்போது அருகில் இருந்த டிராபிக் ராமசாமி, பாத்திமாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்ததுடன், தவறான தகவல் அளித்த பாத்திமாவின் முதுகில் அடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பாத்திமாவின் இந்த கருத்தை படக்குழுவினர்களும் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.