உள்ளூராட்சி மன்ற தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு சாத்தியம்!

அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார். 

விருப்பு வாக்கு முறைத் தேர்தலுக்கு அதிகமானோர் விருப்பமில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மாத்தறை பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

தற்போதைய தேர்தல் முறையை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.
Powered by Blogger.