காச நோயை கட்டுப்படுத்துவதில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!

காசநோயை கட்டுப்படுத்துவதன் ஊடாக தென் ஆசியாவின் நாடுகளுக்கிடையே இரண்டாவது இடத்தை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தேசிய காசநோய் கட்டுப்பாட்டு மற்றும் சுவாசநோய் பற்றிய அமைப்பு தெரிவித்துள்ளது.

2035 ஆம் ஆண்டாகும் போது காசநோயை முழுமையாக இந்நாட்டிலிருந்து கட்டுப்படுத்துவது தமது அமைப்பின் நோக்கமாகும் என அமைப்பின் கொழும்பு மாவட்ட காசநோய் தடுப்பு அதிகாரி டொக்டர் லக்மால் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டி ல் நாட்டிலிருந்து காச நோயாளர்கள் 8511 பேர் பதிவாகியிருந்தனர்.

கடந்த சில வருடங்களில் காச நோயாளர்கள் பதிவாகின்றமை குறைந்துள்ளதாக தேசிய காசநோய் கட்டுப்பாட்டு மற்றும் சுவாச நோய் பற்றிய அமைப்பின் கொழும்பு மாவட்ட காச நோய் தடுப்பு அதிகாரி டொக்டர் லக்மால் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.