உட வளவை ஊடாக கனரக வாகனங்கள் பயணிக்கலாம்!

உட வளவை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு ஊடாக கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஐந்தும் கடந்த வாரம் திறக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து அணைக்கட்டு ஊடாக கனரக வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது

மகாவலி அதிகார சபை இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

குறித்த வான்கதவுகள் ஐந்தும் மூடப்பட்டுள்ளதால் மீண்டும் தேவைப்படின் கனரக வாகனங்களை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்படும் என கடமையிலிருக்கும் பொறியியலாளர் பிரதிப் பணிப்பாளர் சுஜீவ குணசேகர தெரிவித்தார்.

50 வருடங்கள் பழைமை வாய்ந்த உடவளவை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் காணக்கூடியதாகவுள்ள வெடிப்பு நிலைமை தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Powered by Blogger.