உதயங்க வீரதுங்கவை நாடு கடத்தஐக்கிய அரபு இராச்சியம் மறுத்துள்ளது!

மிக் விமானக்கொள்வனவில் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில்தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாடு கடத்தஐக்கிய அரபு இராச்சியம் மறுத்துள்ளது.

 இலங்கையினால் இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஐக்கிய அரபு இராச்சியம்நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நாடு கடத்தல் உடன்பாடு 2002ஆம்ஆண்டு எட்டப்பட்ட போதும் அதற்கு இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒப்புதல்பெறப்படவில்லை.

  இந்தநிலையில் தற்போது உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான மாற்றுமுயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
Powered by Blogger.