700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் 700 ஏக்கர் காணிகள் வனவள திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

  முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வயல்காணிகள் மற்றும் கைவிடப்பட்ட குளங்கள் வனவளத்திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டு எல்லைகள் இடப்பட்டுள்ளன.

 இந்நிலையில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியேறிய மக்களின் விவசாயச் செய்கைகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாக பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது.
Powered by Blogger.