சுவிஸ் புலம்பெயர்மண்ணில் ஓர் புரட்சி.!

சுவிஸ் சூரிச்சில் அமைந்துள்ள சிவன் கோவில் சைவத்தமிழ்ச்சங்கம்
"அன்பே சிவம்"என்னும் அமைப்பால் 
அற்றார் அழிபசி தீர்த்தல் என்னும் பாரம்பரிய உணவுக்கண்காட்சி நிகழ்வு 15.04.2018 சுவிஸ் சூரிச்சில் மிக சிறப்பாக நடந்தேறியது, தாயக உணவுகள் அதாவது எங்களது சிறு கிராமங்களில் அழிந்து போன,வழக்கத்தில் உள்ள உணவுகளை கிட்டத்தட்ட 250 மேற்பட்ட உணவுவகைகளை காட்சிப்படுத்தி அதனை நுகர்வோருக்கு புசிக்கவும் கொடுத்து விளக்கங்களும் கொடுத்தார்கள்,
நம் நாட்டு பழங்கள், மரக்கறிகள் ,பனையில் பெறப்படும் அனைத்தும்,மண்ணால் ஆன பொருட்கள் என பலவகையாக இருந்ததை காணமுடிந்தது,சுவிஸ் மண்ணிலே கிட்டத்தட்ட தமிழர்கள் நாம் முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றோம் இங்கு பல நாட்டவர்கள் தங்களது கலாச்சார உணவுகளை இம்மக்களுக்கு வருடாவருடம் காண்பித்துக்கொண்டு இருக்கிறார்கள் 
அந்தவகையில் இந்த தாயக கண்காட்சியும் இவ்வாறே அமைந்துள்ளது,எங்களது அடுத்த தலைமுறைக்கு இதனை காட்ட ஒரு சந்தர்ப்பாமாக அமைந்துள்ளது,அங்கு உணவுகள் மட்டும் அல்லாமல் எமது கலாச்சார நிகழ்வுகளும் சிறப்பாக இருந்தது
இதனை ஒழுங்காக வடிவமைத்து எங்களது பெண்கள் கலாச்சார உடையிலே இருந்து விளக்கங்களை கொடுத்து பார்க்கும் இடமெல்லாம் தமிழர் பண்டிகையை நினைவுட்டியது, புலம்பெயர் மண்ணில் வாழும் மக்களே உங்களதுபிள்ளைகளை அழைத்து வந்து இந்த கண்காட்சியை காண்பிக்கவேண்டும் வருடத்தில் வருகின்ற பாடசாலை விடுமுறையில் சுவிஸ் வந்து இந்த தாயக உணவுகண்காட்சியில் கலந்துகொள்ளுங்கள், நாம் தாயகத்தையும்,உறவுகளையும், மொழியையும்,கலாச்சாரத்தையும்,உணவுவகைகளையும் நிட்சயம் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லவேண்டிய கடமை ஒவ்வொருவெருக்கும் உள்ளது,
அங்கு அறிவுப்பசிக்கும் எனக்கு கிடைத்தது ,
ஆசிரியை திருமதி கமலினி கதிர் எழுதிய 
"ஒரு வீணை அழுகின்றதே"சிறுகதைத்தொகுப்பு.


முருகேசன் குமணன்
18.04.2018
Powered by Blogger.