கண்களில் பாய்கிறது காவேரி..!

எழுவோம் எழுவோம்
மீண்டும் ஒரு முறை
தமிழராய் நாம் மீண்டெழுவோம்
காவேரி எங்கள்
உயிர்நாடி என
உலகக்காதுகளில் ஒருமுறை
ஓங்கி ஒலித்தெழுவோம்
என்ன இல்லை
இந்த திருநாட்டில்
என்பதை அழித்து
தண்ணீர் இல்லை என்று
திருத்தி எழதுவோம்
நீர் நிலம் வளம் எல்லாம்
பாரதத்தின் பொதுவுடமை என்றால் யார் கொடுத்தது கன்னடனுக்கு தனியுரிமை
பாரதமே நீ எங்கள்
தாய் நாடெனில்
தாகம் எடுத்து அழுகிறோம்
பால் சுரக்க வேண்டாமா
உன் தாய் முலையில்
பாரதம் எங்கள்
தாய் நாடெனில்
வரண்டு போன
எங்கள் நிலங்கள் நோக்கி
நதி பாய்ந்து வர
வழி செய்து விட வேண்டாமா
வடக்கை வாழ வைக்கவா பெருந்தொகையாய்
வாங்குகிறாய் வரி
வலியே உனக்கு வலிக்கவில்லையா தமிழர்களின் வலி
காது பொத்திக் கிடந்தால் செவிடா கண்மூடிக்கிடத்தால் நீ என்ன குருடா அதனால் தான் ஏந்துகிறோம் உமக்கெதிராய் கறுப்புக் கொடி
சிறுதுளி சேர்ந்தற்கே
ஹெ(கி)லி பிடித்தார் மோடி
இன்னும் நாம் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் காவேரி வரும் ஓடி
அல்வையூர் தாசன்
Powered by Blogger.